வியாழன், 5 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ வழிபாடு செய்யப்படுவது ஏன்...?

குலதெய்வ வழிபாட்டை செய்ய தவறும்போது எண்ணிய காரியங்கள் ஈடேறுவதில் சிக்கல், பொருளாதார நிலையில் மந்தமான போக்கு, செய்தொழில் முடக்கம், சேர்ந்தவரால் விரையம், பிள்ளைகள் வழியில் தொல்லை என்று பல்வேறு இடர்பாடுகள் தோன்றும்.

ஒருவரது குலம் ஆலமரம்போல் தழைத்து வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு முக்கியமாக செய்யவேண்டும். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுக்கிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் பலன் தராது.
 
குலதெய்வத்தின் ஆசி இல்லையென்றால் அந்த குடும்பத்தில் திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, நிரந்தர வேலை இல்லாமல் இருப்பது, குடும்பத்தில் பிரச்சனை, உடல் உபாதைகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே வருடத்திற்கு ஒரு முறையாவது பங்குனி உத்திர நாளில் குலதெய்வ கோயிலில்  வணங்கினால், வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.
 
கிராம கோவில் திருவிழா மற்றும் முக்கிய பண்டிகை திருவிழா நாட்களிலும், குல தெய்வ சிறப்பு பூஜைகளை ஒன்றாக இணைத்து செய்வதுண்டு குடும்பத்தில் நடைபெறும் பிறந்த நாள் விழா, காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமண விழா போன்ற விஷேச நாட்களில் குல தெய்வத்திற்கு முதல் அழைப்பிதழ்  வைக்கும் பழக்கம் தற்போதும் இருக்கிறது.
 
திருமண நிச்சயம் குலதெய்வத்தின் முன்பு நடக்கும் வழக்கமும் சில இடங்களில் இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறையாவது உறவினர்களோடு, பங்காளிகளும்  ஒன்றாக இணைந்து சிறப்பாக வழிபாடு செய்கின்றனர்.