1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

பரிகாரங்கள் செய்தும் பலனளிக்காமல் போவதற்கான காரணம் என்ன?

ஒருவர், தான் செய்யும் காரியங்கள் எல்லாம் வெற்றியடைந்தால், மிகவும் சந்தோஷம் அடைவார். அதே நேரம், ஏதேனும் தடை ஏற்பட்டாலோ, அல்லது நடக்காமல் போனாலோ, 'நமக்கு நேரம் சரியில்லை போல் உள்ளது' என்று நினைத்து, ஒரு ஜோதிடரைப் பார்க்க நினைப்பார். 
இதில் யாருடைய தவறும் இல்லை. பரிகாரம் சொன்ன ஜோதிடரும் தவறு செய்யவில்லை. பரிகாரம் செய்தவரும் தவறு செய்யவில்லை.  இதற்கு என்ன காரணம்?
 
பொதுவாகவே, ஒருவரது செயல்களுக்கு அவரவர் விதிப்படி எழுதப்பட்ட கர்மாதான் காரணம். இதில் மூன்று வகையான கர்மா வினைகள் உண்டு. தன்னைச் சார்ந்த தோஷங்களுக்குப் பரிகாரம் என்பது, தெய்வம் சார்ந்த வழிபாடுகள் வகையைச் சார்ந்தவையாகும்.
 
சிலபேர் சொல்வார்கள் நான் பரிகாரம் செய்தேன் சரியாகப் பலன் கிடைத்தது. என்னுடைய கஷ்டங்கள் குறைந்து விட்டன என்று கூறுவார்கள்.  சிலபேர், 'நானும் நிறையப் பரிகாரங்கள் செய்து விட்டேன். ஆனால், இன்னும் கஷ்டம் குறையவில்லை என்பார்கள். இது எதனால்? இப்படி  நடப்பதற்குக் கர்மவினைகளே காரணம். இந்தக் கர்மாவினைகளில் மூன்று வகைகள் உண்டு. அவை 'த்ருத கர்மா', தெரிந்தே செய்த பாவம்,  'த்ருத அத்ருத கர்மா' தெரிந்தே செய்த தப்பு பின்னர் அதற்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்பது, 'அத்ருத கர்மா' தெரியாமல் செய்த தவறு.
 
1. த்ருத கர்மா (தெரிந்தே செய்த பாவம்): 
 
இது மிகக் கடுமையான கொடுமையான பாவம் செய்தவர்களின் கர்ம வினை ஆகும். முற்பிறப்பில் பிறருக்குத் துன்பம் தரக்கூடிய  குற்றங்களைச் செய்தமையாகும். அதாவது, பிறர் சொத்தை அபகரித்து அவர்களைக் கஷ்டப்படுத்தியது, பணத்துக்காகக் கொலை செய்தது, தாய்  தந்தையரை கவனிக்காமல் அவர்களைத் திண்டாட வைத்தது, அதாவது தெரிந்தே அந்தப் பாவங்களைத் தொடர்ந்து செய்தது. இதற்கு  மன்னிப்பே கிடையாது. இந்த ஜன்மத்தில் என்ன பரிகாரம் செய்தாலும், பலன் இருக்காது. இவர்கள் தன் சந்ததிகள் நன்றாக இருக்க, நிறைய  ஏழைகளுக்கு அன்னதானத்தைத் தொடர்ந்து செய்யவேண்டும்.
 
2. த்ருத அத்ருத கர்மா (தெரிந்தே செய்த தவறு பின்னர் அதற்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்பது):
 
சில சமயம் நாம் செய்யும் காரியம் சரியாக இருக்கும் என்று நினைத்து செய்திருப்போம். நல்லவர்களுக்கு செய்ய வேண்டிய உதவியைச் செய்யாமல் விட்டிருப்போம். தீயவர்களுக்கு அவர்களுடைய குணம் அறியாமல் உதவி செய்திருப்போம். ஆனல், அந்தக் காரியம் தவறாக முடிந்திருக்கும். மன்னிக்கக்கூடிய குற்றங்களை, முற்பிறவியில் செய்தவையாகும். அதாவது, தெரிந்து செய்த தவறு அதற்காக மனம் வருந்தி  மன்னிப்பு கேட்பது. இதற்கு இந்த ஜன்மத்தில் ஜாதக ரீதியாக தெய்வப் பரிகாரம் செய்தால், சரியாகி நல்ல பலன் கிடைக்கும். கஷ்டங்கள்  தொடர்ந்து வராது.
 
3. அத்ருத கர்மா (தெரியாமல் செய்த தவறு): 
 
மிகவும் மன்னிக்கக்கூடிய சிறிய குற்றங்கள் தெரியாமல் செய்வது. இதற்குப் பரிகாரங்கள் தேவையில்லை. மனம் வருந்தி கடவுளிடம் செய்யும்  வேண்டுதலே போதுமானது.