செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: திங்கள், 31 ஜனவரி 2022 (11:34 IST)

தை அமாவாசை தர்ப்பணம் கொடுக்க சிறந்த நேரம் எது...?

மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதன் அவசியத்தை  நமது முன்னோர்களின் பழக்க வழக்கங்களை சொல்லிக்கொடுக்க கிராமங்களில் இப்போது சாத்திரங்களை அறிந்தவர்கள் அநேகமாக இல்லை.


திதியின் முக்கியத்துவத்தை நமது முன்னோர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்து கூறிவிட்டனர். பித்ருகளுக்கு தர்ப்பணம் பூஜை செய்யாதவர்கள் முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகின்றனர். அப்படி சாபம் பெற்றவர்களின் வீடுகளில் தான் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கிறது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாளான தை அமாவாசை இன்று வருகிறது. இந்த நாள் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கலாம். இதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

தை மாதம்18-ம் தேதி பகல் 2-மணி முதல் அடுத்த நாள் பகல் 12 மணி வரை மணி வரை அமாவாசை திதி உள்ளது. என நம்முடைய முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கவும், அவர்களை வழிபடவும் மிகச்சிறந்த நாளாகும். ராகு காலம் எமகண்டம், குளிகை நேரம் தவிர பிற நேரங்களில் திதி கொடுக்கலாம்.

மாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை. அந்த தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து உணவு படையலிட்டு அவர்களின் ஆசி பெறும் போது, நமது பாக்ய ஸ்தானம் வலிமை பெறும். இதன் மூலம் திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய், கடன் தொல்லை போன்ற பிரச்சினைகளை நீக்கி கர்மவினைகளுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.