வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் என்ன...?

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். சிவன்கோவில்களுக்கு சென்று வரும்போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்கிக் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் செல்வம் பெருகும். மேலும் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்யுங்கள். 
 
மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் தவறாமல் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம்செய்து வெண் பொங்கலை உங்களால் முடிந்த அளவுக்கு தானம் கொடுங்கள். எல்லாவித செல்வமும் தேடி வரும்.
 
கடகம்: கடக ராசிக்காரர்கள் பசுமாட்டுக்கு உணவு தானம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். இது குடும்பத்தில் வறுமையை விரட்டி செல்வத்தை சேர்க்க உதவும். மேலும் ஏழை நோயாளிகளுக்கு மருந்து வாங்கி தானம் கொடுத்தால் உங்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.
 
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் உங்கள் மனதில் அமைதி ஏற்படும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதை கேட்டு வாங்கிக்கொடுங்கள். அது புண்ணியத்தை சேர்க்கும்.
 
கன்னி: கன்னி ராசிக்காரர்கள் குருபகவானை தவறாமல் வழிபடவேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும். 
 
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு விநாயக வழிபாடு கைகொடுக்கும். அடிக்கடி ஏழை எளியோர்களுக்கு வெண் பொங்கல்தானம் செய்யுங்கள். இதனால் புதிய சொத்துக்கள் வந்து உங்களுக்கு சேரும். 
 
விருச்சகம்: விருச்சக ராசிக்காரர்கள் தங்களால் இயன்ற அளவு மாற்றுத்திறனாளிகளுக்கு தானம் செய்ய வேண்டும். கடன்கள் தீர லட்சுமி நரசிம்மரை வழிபட்டு பானகம் தானம் செய்யலாம். 
 
தனுசு: தனுசு ராசிக்காரர்கள் தவறாமல் முருகனை வழிபட வேண்டும். குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து பிறகு பக்தர்களுக்கும் தானம் செய்யலாம். வாரம் ஒரு முறை செவ்வாய் அல்லது வெள்ளியில் துர்க்கை அம்மனுக்கு மலர் தானம் செய்யலாம். 
 
மகரம்: மகர ராசிக்காரர்கள் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும். மேலும் வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கி கொடுக்கலாம். கோவில்களில் சீரமைப்பு பணிகள் நடக்கும்போது தானம் செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
 
கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாடை மறக்காமல் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு கதம்ப உணவை அடிக்கடி தானமாக கொடுக்க வேண்டும். இதனால் உங்களுக்கு வரும் பண வரவு இரட்டிப்பாகும். 
 
மீனம்: மீன ராசிக்காரர்கள் பவுர்ணமி நாட்களில் சிவ தரிசனம் செய்வது நல்லது. ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம் அதிகரிக்கும். மேலும் நல்லெண்ணை தீபம் தானம் செய்யலாம். அய்யப்ப பக்தர்களுக்கு உதவினால் கூடுதல் நன்மை உண்டாகும்.