தொடர்புடைய செய்திகள்
- கோயில் கோயிலாக ஏறி இறங்கும் ரஜினி மகள்... பூஜை, பரிகாரம்னு ஒரே பிஸி!
- திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையை கிரிவலம் வருவதால் கிடைக்கும் பலன்கள்...!
- கோவில் பிரசாதத்தால் மீண்டும் பலி! கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சி சம்பவம்
- கரூர் அருகே புகழிமலையில் தைப்பூசத் தேரோட்டம் நிகழ்ச்சி
- டீ போட்டதாக டகால்டி விட்டாரா மோடி? காட்டிக்கொடுத்த க்ளோஸ் ஃப்ரெண்ட்!
எந்த தெய்வத்திற்கு எத்தனை சுற்று வலம் வரவேண்டும்...?
ஒவ்வொரு தெய்வத்தையும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். பிரகார வலம் எப்போதும் இடமிருந்து வலமாக வரவேண்டும். ஒவ்வொரு கடவளுக்கும் இத்தனை முறைத்தான் வலம் வரவேண்டும் என்பது ஐதீகம்.
கோவிலுக்குள் எந்த தெய்வத்தை எத்தனை முறை வலம் வரவேண்டும் என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். இன்றோ பெயரளவில் ஒரு முறை அல்லது 3 முறை வலம் வருதல் என்று வழக்கமாகிவிட்டது.
கோவிலில் பிரகாரத்தை சுற்றி வருவதால் முற்பிறவியில் செய்த பாவம் நீங்கும். அப்படி வலம் வரும் போது, நிறைமாத கர்ப்பிணி நடப்பது போல மெதுவாகவும், தெய்வ சிந்தனையுடனும் வலம் வர வேண்டும்.
ஓடுவது, வேகமாக நடப்பது, சப்தம் எழுப்புவது, தேவையற்றதை பேசிக்கொண்டே வருவது ஆகியவை பாவத்தை அதிகமாக்கும்.
விநாயகரை ஒரு முறையும், சூரிய பகவானை இரண்டு முறையும், ஈஸ்வரனையும், அம்மனையும் 3 முறை வலம் வர வேண்டும். விஷணுவை நான்கு முறையும், லட்சுமி தாயாரை ஐந்து முறையும், அரசமரத்தை ஏழு முறையும் சுற்றி வந்து வணங்க வேண்டும். மகான்களின் சமாதியை 4 முறை வலம் வர வேண்டும். தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும், தாயாரையும் வணங்குபவர்கள் 4 முறை வலம் வரவேண்டும்.
நவகிரகங்களை ஒன்பது முறை சுற்றினால் நன்மை பயக்கும். தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வணங்குவதை ஆத்ம பிரதட்சிணம் என்பர். காலையில் சூரிய நமஸ்காரம் செய்யும் போது மட்டும் இதைச் செய்ய வேண்டும்.
கோவிலுக்குள் ஆலய பலிப்பீடம், கொடிக்கம்பம் முன்புதான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும். கோயிலில் ஒவ்வொரு சுவாமிக்கும் தனித்தனியாக நமஸ்காரம் செய்யக் கூடாது. கொடிமரத்திற்கு வெளியில் செய்தால் எல்லா சுவாமிக்கும் சேர்த்து நமஸ்காரம் செய்த புண்ணியம் கிட்டும்.
ஆண்கள் அஷ்டாங்கப் பணிவு (சாஷ்டாங்கமாக) என்ற முறையிலும், பெண்கள் பஞ்சாங்கப்பணிவு (குணிந்து) என்ற முறையிலும் விழுந்து வணங்க வேண்டும்.
அடுத்த கட்டுரையில்
