வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 27 ஜனவரி 2019 (07:18 IST)

கோவில் பிரசாதத்தால் மீண்டும் பலி! கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சி சம்பவம்

கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கோவில் ஒன்றில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட பக்தர்கள் 17 பேர் பலியாகிய அதிர்ச்சி சம்பவத்தில் இருந்தே இன்னும் அம்மாநில மக்கள் மீண்டு வரவில்லை. இந்த நிலையில் அதே கர்நாடக மாநிலத்தில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட ஒரு பெண் பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடக தலைநாகர் பெங்களூரு அருகே உள்ள சிக்கபல்லபுரா மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு. இந்த நிலையில் கவிதா என்பவர் தன்னுடைய குடும்பத்தினர்களுடன் நேற்று இந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார். கோவில் வழிபாடு முடிந்ததும் கோவிலுக்கு வெளியே மூன்று பேர் கொடுத்த பிரசாதத்தை கவிதா குடும்பத்தினர் வாங்கி சாப்பிட்டனர். 
 
பிரசாதம் சாப்பிட்ட சிறிது நேரத்தில் கவிதா உள்பட அவரது குடும்பத்தினர் 10 பேர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதில் கவிதா சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடைய உறவினர்கள் 9 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 
 
இது குறித்து கோவில் நிர்வாகம் விளக்ககமளித்தபோது, 'கோவில் சார்பாக யாருக்கும் பிரசாதம் வழங்கப்படவில்லை என்றும் தனிப்பட்ட முறையில் ஒருசிலர் பிரசாதம்  வழங்கியதாகவும் கூறியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவில் வெளியே பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாக கூறினர்