Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஷ்டங்களை தீர்க்கும் காலபைரவர் வழிபாடு !!

Written By Sasikala
Updated: வியாழன், 4 பிப்ரவரி 2021 (12:24 IST)

சிவாலயங்களில், பிராகாரத்தைச் சுற்றி வரும்போது, காலபைரவருக்கு தனிச்சந்நிதி அமைந்திருக்கும். தேய்பிறை அஷ்டமி, பைரவருக்கு உகந்த நாள். இந்த நாளில்,  காலையிலும் மாலையிலும் பைரவருக்கு அபிஷேகங்கள், அலங்காரங்கள், ஆராதனைகள் விமரிசையாக நடைபெறும்.
 
தேய்பிறை அஷ்டமியில், அவருக்கு உரிய நன்னாளில், பைரவரை வணங்கிட பயமெல்லாம் விலகிடும். இந்த நாளில், பைரவருக்கு செவ்வரளி மலர்கள் சார்த்தி வணங்கி வழிபடுவது, மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்பது ஐதீகம்!
 
அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று, பிராகாரத்தில் உள்ள காலபைரவரைத் தரிசிக்கலாம். செவ்வரளி மாலை சார்த்தி வழிபடலாம். மிளகு அல்லது தயிர்சாதம் நைவேத்தியமாக வழங்குங்கள். வெண்பொங்கல் நைவேத்தியமும் சிறப்பைத் தரும்.
 
இந்த தினங்களில் பைரவ வழிபாடு செய்வதும் பைரவாஷ்டகம் சொல்லி வணங்குவதும் பலன்களைத் தந்தருளும். பைரவருக்கு வடைமாலை சார்த்தி வேண்டிக்கொள்ளலாம்.

தெருநாய்களுக்கு உணவளிப்பதும் பிஸ்கட் வழங்குவதும் எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கும். துஷ்ட சக்திகள் நம்மை  நெருங்கவிடாமல் பைரவர் காத்தருள்வார். அஷ்டமி என்றில்லாமல், பைரவரை எப்போதும் வழிபடலாம்.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments