1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

கண் திருஷ்டியை கழிக்க என்ன செய்யவேண்டும்...?

திருஷ்டிப்பட்டவர் உடலில் அசதி உண்டாகும். அடிக்கடி கொட்டாவி வரும். எந்த வேலையிலும் மனம் லயிக்காது. எதாவது புது உடை அணிந்தால் அது கிழியலாம்.

சில சமயம் அதில் எதாவது கருப்புக்கறை படலாம். வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும்.
 
கணவன்-மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்னைகள், சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை, சுபநிகழ்ச்சிகளில் தடை, ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச்  செலவுகள் ஏற்படுதல், சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது  போன்றவை உண்டாகும்.
 
தூக்கம் அதிகமாகலாம் சப்பாடு பிடிக்காமல் போகலாம். அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும். கிடைக்கும் சந்தர்ப்பத்தில் இருந்த விஷயங்கள் எல்லாம் கை  நழுவிப் போகும்.
 
கவனிக்க :
 
திருஷ்டிக்கழிக்க அந்தி சாயும் நேரம் உகந்தது. திருஷ்டிக் கழிப்பவர் திருஷ்டி சுற்றிக்கொள்பவரைவிட வயதில் மூத்தவராக இருந்தல் அவசியம். திருஷ்டிக்கழிக்கும்  நாட்கள் செவ்வாய் அல்லது ஞாயிறு மாலைப் பொழுதாக இருக்க வேண்டும். கிழக்குத் திசையை நோக்கி நிற்க வேண்டும்.
 
தனியாகவோ அல்லது கூட்டமாகவோ எப்படி வேண்டுமானலும் திருஷ்டி கழிக்கலாம். ஆனால் கூட்டத்தில் நிற்பவர்களில் பாதிபேருக்கு ஒருவரும், மீதி பேருக்கு மற்றொருவர் என்று மாற்றி மாற்றி திருஷ்டி கழிக்க கூடாது. நிற்கிற அத்தனை பேருக்கும் ஒரே நபர் தான் திருஷ்டி கழிக்க வேண்டும்.