1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சனி தோஷத்தை போக்க செய்யவேண்டிய பரிகாரங்கள்...!!

அவரவர் பிறந்த ஜென்ம நட்சத்திர தினத்தன்றோ அல்லது சனிபாகவனின் பிறந்த நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரம் அன்றோ ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அர்ச்சனைகள் செய்வது நன்மையான பலன்களை தரும்.

சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிசேகம் செய்து, எள் சாதம், வடை மாலை செய்து வழிபட்டு, அனைத்தையும் ஏழைகளுக்கு விநியோகம் செய்யலாம்.
 
சனிபகவானுக்கு நவக்கிரக சாத்தி ஓமங்கள் செய்து வழிபடலாம். எள்ளை சுத்தம் செய்து வறுத்து வெல்லம், ஏலக்காய் பொடியுடன் சேர்த்து இடித்து திலசூரணம் செய்து வெங்கடேச பெருமாளுக்கும், சனிபகவானுக்கும் படைத்து விநியோகம் செய்யலாம்.
 
ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருந்து காகத்திற்கு உணவு, பிஸ்கெட், நீர் வைக்கலாம். ஏழைகளுக்கும், மாற்று திறனாளிகளுக்கும்ம் அன்னதானம், வஸ்திரதானம் செய்தால் சனிபகவானின் அருள் கிட்டும்.
 
சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி, சனி பகவானுக்கு ஒரு சிறு துணியில் எள் முடிந்து, அதை விளக்கில் வைத்து நல்லெண்ணெய் விட்டு விளக்கேற்றி கருங்குவளை மலரால் சனி பகவானை அர்சிப்பதோடு, எள் சாதம் நெய்வேத்தியம் செய்வதும் நல்லது. 
 
தொடர்ந்து, சனி கவசம் அல்லது காயத்திரி செபம் செய்யலாம். நெய்வேத்தியம் செய்யும் எள் சாதத்தில் சிறிது காக்கைக்கு வைத்து விட்டு, பின் அனைவருக்கும் அளித்து சாப்பிடலாம்.
 
மங்கு சனி, ஏழரை சனி, ஜென்ம சனி என எந்த சனி தோசம் பீடித்திருந்தாலும் மேற்சொன்னவற்றை செய்துவந்தால் நற்பலன்களை பெறலாம்.