Daily Horoscope
✕

அடகு வைத்த நகையை விரைவில் மீட்க இந்த பரிகாரம் செய்தால் போதும்...!

Updated: வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (12:49 IST)
 
அடகு வைக்கப்பட்ட உங்களின் சொந்த வீடு, நிலம், நகைகள் போன்றவற்றை சீக்கிரம் மீட்க ஒரு வெள்ளை தாளில் அடகு கடை அல்லது  வங்கியின் பெயர் அடகு எண், அடகு வைத்த தேதி, அடகு பொருள் ஆகியவைகளை தெளிவாக எழுதி, பூஜை அறையில் காமாட்சி  விளக்கேற்றி அதன் பாதத்தில் அடகு தகவல்கள் அடங்கிய அந்த காகித தாளை வைத்து வணங்கி விட்டு பிறகு பொருளின் பெயரை மட்டும்  கூறி அதோடு “வர வர ஸ்வாகா” என்று 108 முறை உச்சரிக்கவும் உதாரணமாக "1 பவுன் சங்கலி 1/2 பவுன் கம்மல் வர வர ஸ்வாகா, 3  சென்ட் நிலம், 1 ஏக்கர் நிலம் வர வர ஸ்வாகா" என்று கூறி துதிக்க வேண்டும். 
 
இந்த பரிகார பூஜை செய்பவர் மாதத்தில் வரும் அவரின் பிறந்த நட்சத்திரம் அன்று தொடங்கி செய்து வர வேண்டும். பிறகு வாரம் தோறும்  வெள்ளிக்கிழமை மாலை 6 முதல் 7 மணிக்குள் செய்ய வேண்டும். தங்களின் பிறந்த நட்சத்திரம் தெரியாதவர்கள் வெள்ளிக்கிழமை அன்று  இந்த பரிகார பூஜையை தொடங்க வேண்டும். 
 
மூன்று பௌர்ணமி தினத்தன்று நீங்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயிலில் இருக்கும் பைரவர் சந்நிதியிலோ அல்லது பைரவர் கோயிலிலோ பைரவரை செவ்வரளி பூக்கள் சமர்ப்பித்து, விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி பைரவரை மனமுருக வழிபட்டு வந்தால்  உங்களின் செல்வ சேமிப்பு நிலை உயர்ந்து, கூடிய விரைவில் நீங்கள் அடகு வாய்த்த நகை, நிலம், வீடு, வாகனம் போன்ற எதையும்  மீட்டுவிடலாம்.

எல்லாம் காட்டு

தீபாவளிக்கு முன்பு எந்த பொருளையெல்லாம் தூக்கி வீசணும்? - வாங்க பார்ப்போம்

பிறக்காத குழந்தைகளின் உணவை நாம் உண்கிறோம். சத்குரு பேச்சு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்!.. கட்டண விரைவு தரிசனம் ரத்து!..

புரட்டாசி பிரதோஷம், மகாளய அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல அனுமதி!

சத்குருவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.O..

அடுத்த கட்டுரையில்
Show comments