வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

மகாலட்சுமி தேவி வழிபாட்டின்போது கூறவேண்டிய மந்திரம் !!

செல்வத்திற்கு அதிபதியான மகா லட்சுமியை எவர் ஒருவர் வழிபடுகிறார்களோ அவர்களது வீட்டில் நிச்சயம் செல்வம் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் மகாலட்சுமியை வழிபடுகையில் கூறவேண்டிய லக்ஷ்மி மூல மந்திரம். 

மகாலட்சுமி மூல மந்திரம்:
 
ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி 
மஹாலக்ஷ்மி ஏய்யேஹி 
ஏய்யேஹி சர்வ 
ஸௌபாக்யம் மே தேஹி ஸ்வாஹா
 
மகாலட்சுமி தேவிக்குரிய சக்தி வாய்ந்த மூல மந்திரம் இது. இந்த மூல மந்திரத்தை ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமையில் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி படத்தை  தூய்மை செய்து, அப்படத்திற்கு பொட்டிட்டு, பூக்கள் சமர்ப்பித்து, நெய் தீபமேற்றி, சர்க்கரை கலந்த பசும்பால் நைவேத்தியம் வைத்து வழிபட வேண்டும். 
 
பிறகு இந்த மூல மந்திரத்தை 108 முறை 1008 முறை துதித்து வழிபட வேண்டும். தினமும் காலையில் குறைந்த பட்சம் 16 முறை இந்த லட்சுமி மூல மந்திரத்தை  ஜெபிக்க வேண்டும். மந்திரஜபம் காலத்தில் கோபப்படுதல், சத்தமாகப் பேசுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். 
 
இந்த மந்திரத்தை பாராயணம் செய்து வருபவர்களுக்கு மகாலட்சுமியின் கடாட்சம் கிடைக்க பெற்று செல்வ சேர்க்கை அதிகரிக்கும். தினசரி மற்றும் மாத வருமானம்  பெருகும். தொழில், வியாபாரங்களில் லாபங்கள் அதிகரிக்கத் தொடங்கும். வாழ்க்கையில் ஆடம்பர வசதிகளின் பெருக்கம் உண்டாகும்.