1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

பல சிறப்புகளை பெற்றுள்ள மகம் நட்சத்திரம் !!

மகம் என்பது கேதுவின் நட்சத்திரம். ஒரு ஆன்மாவை லெளகீகத்திற்கு அழைப்பது ராகு என்றால், மோட்சம் கொடுப்பது கேதுவே. மகம் நட்சத்திர நாளில்  மோட்சகாரகன் எனப்படும் கேதுவின் மகம் நட்சத்திரத்தில், சந்திரன் சஞ்சாரம் செய்கிறார்.

கால புருஷ 5-ம் அதிபதி சூரியன் வீட்டில் சந்திரன். 5-ம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம். சூரியன் ஆன்மா, சந்திரன் உடல். சந்திரன் புனித நீருக்கு அதிபதி.  ராஜகிரகமான சூரியன் தன் வீட்டை தானே பார்ப்பதால், மகம் நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் போது சூரியன், சந்திரன், கேதுவின் தொடர்பு ஒவ்வொரு  ஜீவாத்மாவின் கர்ம வினையை போக்குவதில் நிகரற்ற சக்தி படைத்த நாளாக மாசிமகம் திகழ்கிறது.
 
அதாவது ஆன்மா என்ற சூரியனின் பார்வை பெறும் சந்திரனின் மகம் நட்சத்திரம், ஆன்மாவையும், உடலையும் பரிசுத்தம் அடையச்செய்யும். அதன் மூலம் கர்ம  வினைப் பதிவு குறையும். இந்த ஆத்ம சுத்தியானது, சூரியன், சந்திரனின் தொடர்பு எப்பொழுது சிம்மத்திற்கு கிடைக்கிறதோ அப்பொழுது மட்டுமே சாத்தியம்.
 
இப்படி பல சிறப்புகள் பெற்ற நட்சத்திரம் மகம் ஆகும். மகமும் பவுர்ணமியும் இணையும் மாசி மகம் வருடத்திற்கு ஒரு முறையே வருகிறது. பவுர்ணமி அன்று  நிலவு முழுமையான தோற்றம் பெற்று சந்திரனின் முழு சக்தியும் உடையதாய் திகழ்கிறது. இது மக்களுக்கு வளமும் நலனும் அளிக்கக்கூடிய நாளாகும். இதனால்  இந்நாள் சிறப்பான நாளாக இருக்கிறது.