திங்கள், 25 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

விளக்கு எந்த எண்ணெய்யில் ஏற்றினால் என்ன பலன்கள்...!

தீபம் ஏற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய  உதயதிற்கு முன்) மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை (சூரிய உதயதிற்கு பின்). 
காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம்  விலகும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை.  இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் லெட்சுமி வாசம் செய்வாள்.
 
விளக்கு ஏற்றும் முறை:
 
ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும். 
இரு முகம் ஏற்றினால் - குடும்ப ஒற்றுமை கிட்டும். 
முன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும். 
நான்கு முகம் ஏற்றினால் - பசு,பூமி,செல்வம், சர்வபீடை நிவர்த்தி ஆகும். 
ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும்,ஐஸ்வர்யம் பெருகும்.
 
நல்லெண்ணை எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப் படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும்.
 
நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகல வித சந்தோஷமும் இல்லத்தில் நிறைந்திருக்கும். விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ்  அபிவிருத்தியாகும்.
வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.
 
நெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை வணங்கினால் தேவியின் அருள் கிட்டும்.
 
கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.
 
கணவன்-மனைவி உறவு நலம் பெறவும் வேப்ப எண்ணெய் தீபம் உகந்தது.
 
அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெறவழி செய்வது ஆமணக்கு எண்ணெய் தீபம். எள் எண்ணெய் (நல்லெண்ணை)   தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது.
 
நவக்கிரகங்களை திருப்தி செய்யவும் ஏற்றது. மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய்,  நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.
 
மந்திரசித்தி பெற வேண்டுவோர் விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.