ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வள்ளலாரின் அற்புத பொன்மொழிகள் சிலவற்றை தெரிந்துக்கொள்வோம் !!

பெற்றோர்களிடம் பாசமாக இருக்கும் குழந்தைகள் கூட, பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் போகலாம், கவலை  படாதே!

பெற்றோரை மதிக்காத குழந்தைகள் கூட சொத்துக்காக சண்டை போடலாம். மனதை தளர விடாதே.
 
உன் சொத்தை தான் மட்டுமே அனுபவிக்க வேண்டுமென நினைத்து, நீ சீக்கிரம் இறக்க வேண்டுமென, நினைக்கலாம். பொறுமையாக இரு.
 
அவரவருடைய உரிமை என்ன என்பதை மட்டுமே அறிவர்; கடமை மற்றும் அன்பை அறிய மாட்டார்கள். அவரவருடைய வாழ்க்கை அவரவருடைய விதிப்படி மட்டும் தான் என அறிந்து கொள்.
 
உன்னிடம் இருக்கும் போதே உன் குழந்தைகளுக்கு கொடுத்து விடு. நிலையை அறிந்து கொண்டு, அளவோடு மட்டுமே கொடு. அவசரப்பட்டு எல்லாவற்றையும்  கொடுத்து விட்டு, பின் அவர்களிடம் கை ஏந்தாதே.
 
“என் சொத்துக்கள் எல்லாம் நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்து விடாதே. நீ இறக்கும் தருணத்தை எதிர் பார்த்து காத்திருப்பர்.
 
கொடுக்க வேண்டும் என நீ நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தரவேண்டும் என நினைப்பதை பிறகு கொடு அவசரம் வேண்டாம். உன்னால் மாற்ற முடியாது என நீ நினைப்பதை, மாற்ற முயற்சி செய்யாதே.
 
அடுத்த குடும்பத்தின் நல்ல நிலையைக் கண்டு, பொறாமை படாதே! மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழ கற்றுக் கொள்.