Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் பணவரவு அதிகரிக்க இதை செய்தாலே போதும் !!

Written By Sasikala
Published: செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (09:25 IST)

ருத்ராட்சம், அருட் பிரசாதம், எலுமிச்சை பழம், மஞ்சள் காப்பு, குங்குமம் ஆகியன வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தால் அந்த வீட்டில் நிம்மதியும்,  செல்வ செழிப்பும் இருக்கும்.
 
நாம் ஏதேனும் ஒரு புதிய தொழில் அல்லது வீடு ஆகியவற்றில் குடியேறும் போது நாம் முதலில் மகாலட்சுமியின் அம்சமான உப்பு மற்றும் அம்மனின் அம்சமான மஞ்சள், நிறைகுடம் தண்ணீர், தெய்வங்களின் படங்கள் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.
 
வீடுகளில் உள்ளே நுழையும் போதே நறுமணம் வீச வேண்டும். அதனால் தினமும் வீட்டை துடைத்து சுத்தமாக வைத்து சாம்பிராணி அல்லது ஊதுபத்தி ஏற்றி  வைக்க வேண்டும்.
 
மேலும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று சிறிதளவு கல் உப்பு வாங்கி வந்தால் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.
 
அரசமரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை சுற்றி வந்து தீபம் ஏற்றி வழிபட்டுவந்தால் பண வரவு அதிகரிக்கும். இதை வாரந்தோறும்  கடைபிடித்தால் வாழ்வில் செல்வம் மென்மேலும் பெருகும்.
 
பணப்பெட்டியில் ஏலக்காய், மல்லிகைப்பூ, சந்தனம், வில்வ இலை போன்றவற்றை வெள்ளிக்கிழமைகளில் வைத்து வழிபட்டு வந்தால் அஷ்டலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்கும்.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments