1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

எந்த கிழமையில் எந்த சாமிக்கு அபிஷேகம் செய்வது நல்லது...!

எந்த சாமி சிலைக்கு அபிஷேகம் செய்வதாக இருந்தாலும் மலர் வைத்தே அபிஷேகம் செய்ய வேண்டும். இரண்டு நாகங்கள் இணைந்ததுபோல் இருக்கும் நாகராஜா சிலைக்கு வெள்ளிக்கிழமை காலை ராகு காலத்தில் மஞ்சள், குங்குமம் வைத்து செல்வரளி பூ சாற்றி அபிஷேகம் செய்தால் கணவன் - மனைவி  இடையே ஒற்றுமை பெருகும்.
ஒவ்வொரு தெய்வத்துக்கும் அபிஷேகம் செய்வதற்கு உகந்த தினத்தை நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர் அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் விநாயகர் மற்றும் நவக்கிரகங்களுக்கு அபிஷேகம் செய்யலாம். திங்கட்கிழமை சிவனுக்கும், செவ்வாய்க்கிழமை முருகனுக்கும், புதன்கிழமை பெருமாளுக்கும், வியாழக்கிழமை தெட்சிணாமூர்த்திக்கும், வெள்ளிக்கிழமை அம்பாளுக்கும், சனிக்கிழமை கண்ணனுக்கும் அபிஷேகம் செய்யலாம்.
 
வைணவத்தலங்களில் ஆஞ்சநேயருக்கு நடத்தப்படும் பால் அபிஷேகம் ஏராளமான பலன்களை வாரி வழங்கக் கூடியதாகும் .
தினமும் பழனி முருகனுக்கு 6 தடவை அபிஷேகம் செய்யப்படுகிறது. நல்லெண்ணை, பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி ஆகிய 4 பொருட்கள் மட்டுமே அபிஷேகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.