வியாழன், 29 ஜனவரி 2026
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

ராகு பகவான் பலத்தால் உண்டாகும் பலன்கள்...!

ராகு பகவான் பலத்தால் உண்டாகும் பலன்கள்...!
ராகுவுக்கு சொந்த வீடு இல்லை என்ற காரணத்தால் ராகு நின்ற வீட்டதிபதியின் நிலையை கொண்டே ராகு அதன் பலனை தருவார். ராகு திசை மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும். ராகுவுக்கு சொந்த வீடு இல்லை என்ற காரணத்தால் ராகு நின்ற வீட்டதிபதியின் நிலையை கொண்டே ராகு  அதன் பலனை தருவார். 
பொதுவாக ராகு பகவான் 3,6,10,11 ஆகிய ஸ்தானங்களில் அமையப் பெற்று சுப கிரகங்களின் சேர்க்கையுனிருந்தால் நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் நல்ல மன தைரியம் உண்டாகும். ராகு நின்ற வீட்டதிபதியும் பலம் பெற்று அமைந்து விட்டால் அதிகம் சம்பாதிக்கும் யோகம், வெளியூர் வெளிநாட்டு  தொடர்புடையவைகளால் உயர்ந்த நிலைக்கு செல்லக் கூடிய அமைப்பு, உற்றார் உறவினர்களின் ஆதரவு ஆடை ஆபரண சேர்க்கைகள் யாவும் சிறப்பாக அமையும். புதுமையான கட்டிடங்கள் கட்டுவது, புதுமையான விஷயங்களில் ஆர்வம் காட்டுவது போன்றவற்றில் ஈடுபாடு கொடுக்கும்.
 
அதுவே ராகு பகவான் அசுப பலம் பெற்று ராகு நின்ற வீட்டதிபதியும் பலமிழந்திந்தால் ராகு திசை நடைபெற்றால் உடல் நிலையில் பாதிப்பு, எதிர்பாராத விபத்துக்களை சந்திக்கும் சூழ்நிலை, உடலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள கூடிய அமைப்பு  கொடுக்கும் அதிக முன் கோபமும் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், தவறான பெண்களின் சேர்க்கைகள், பிள்ளைகளுக்கு  தோஷம், அரசு வழியில் தண்டனை பெறக் கூடிய நிலை, அபராதம் கட்ட வேண்டிய நிலை போன்ற பலவிதமான துக்க பலன்கள் உண்டாகும். உடல்  நிலையிலும் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்ணும் உணவே விஷமாக  மாற கூடிய நிலை ஏற்படும்.