செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 17 மே 2022 (17:27 IST)

வாரம்தோறும் வரக்கூடிய செவ்வாய் கிழமையில் வழிபாடு செய்வது எவ்வாறு...?

Lord Karthikeyan
முருகப்பெருமானுக்கு பொதுவாக மாதந்தோறும் 3 விரதங்கள் கடைபிடிக்கப்படும். முதலாவதாக வார விரதமான செவ்வாய்க்கிழமை விரதமிருந்து வழிபாடு செய்வது.


இரண்டாவதாக நட்சத்திர விரதம் என்று சொல்லப்படும் கிருத்திகை விரதம். மூன்றாவதாக திதி விரதம் என்று சொல்லப்படும் சஷ்டி விரதம்.

கிருத்திகை விரதம்: வாழ்வில் நமக்கு விதிக்கப்பட்ட வினையெல்லாம் தீர வேண்டுமென்றால் முருகப்பெருமானின் கிருத்திகை நட்சத்திர விரதத்தை மேற்கொள்ள வேண்டும். இன்னல்கள் இல்லாத இனிமையான வாழ்க்கை அமைய முருகப்பெருமானின் கிருத்திகை விரதம் நமக்கு கைகொடுக்கும்.

செவ்வாய் விரதம்: வாரம்தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்துவர வாழ்வில் இருக்கக்கூடிய அத்தனை தடைகளும் விலகும்.

குறிப்பாக ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களால் வாழ்க்கையில் முன்னேற தடை ஏற்பட்டால் அவர்களுக்கு செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடு மிக மிக உகந்தது.

வாரம்தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்று வீட்டில் முருகப்பெருமானின் திருவுருவ படத்திற்கு செவ்வரளி பூக்களால் அலங்காரம் செய்து, 6 நெய் தீபங்கள் ஏற்றி மனமுருகி வேண்டிக்கொண்டால் சுபிட்சம் கிடைக்கும்.

முருகப்பெருமானை மனதார வழிபட்டால், வாழ்வில் உள்ள அனைத்து துன்பங்களையும் நீக்கி, சகல சௌபாக்கிங்களையும் தந்தருள்வார் முருகப்பெருமான்.