ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

தலைவாசல் பூஜையின்போது தானியங்கள் பயன்படுத்துவது ஏன்...?

வீடு கட்டுவது என்றால் சும்மா கிடையாது! வாஸ்து, பூஜை, ஹோமம் என பலவித சடங்குகளுக்கும் சாஸ்திரங்களுக்கும் பஞ்சமிருக்காது. இந்த பூஜைகளில் முக்கியமான ஒன்று வாசக்கால் பூஜை. கீழே காசு மற்றும் நவதானியங்களை போட்டு வாசக்காலைக் கட்டும்போது செல்வம் கொழிக்கும் என்பது  நம்பிக்கை. 
நவ என்றால் ஒன்பது என்று பொருள் சிறு தானியங்கள், இந்து சமய நம்பிக்கையுடையோர் புதிதாக வீடு கட்டுதல், திருமணம் மற்றும் சுப  நிகழ்வுகளுக்காக வீடுகளின் முன்பு பந்தல் அமைத்தல் போன்ற நிகழ்வுகளுக்கான சில வழிபாடுகளின் போது நவதானியத்தை வழிபாட்டுப்  பொருளாக வைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது.
 
நவ தானியங்களும் - நவ கிரகங்களும்:
 
1. நெல்
2. துவரை
3. உளுந்து
4. பச்சை பயிறு
5. மொச்சை
6. எள்
7. கோதுமை
8. கொள்ளு
9. கொண்டை கடலை
நவ கிரகங்கள்:
 
சூரியன் - கோதுமை 
சந்திரன் - அரிசி (நெல்)
செவ்வாய் -  துவரை 
புதன் - பச்சைபயிர் 
குரு - கொண்டை கடலை 
சுக்கிரன் - மொச்சை 
சனி -  எள் 
ராகு - உளுந்து 
கேது - கொள்ளு
 
நவதானியங்களை கடைகளில் ஒன்றாக வாங்காமல், தனிதனியே வாங்கி வாந்து வீட்டில் வைத்து அவைகளை ஒன்று சேர்த்து நவகிரகங்களுக்கு வைத்து வழிபட ஒன்பது கிரகங்களின் தோசம் விலகும்.