Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணவரவை அதிகரிக்க செய்யுமா கருப்பு மஞ்சள்...?

Written By Sasikala
Updated: செவ்வாய், 10 நவம்பர் 2020 (12:47 IST)

இந்த கரு மஞ்சளை, மஞ்சள் இழைக்கும் கல்லில் நன்றாக இழைத்து நெற்றியில் திலகமாக பூசிக் கொண்டு சென்றால் நாம் எதிர்பார்க்கும் பணவரவு கிடைக்கும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கருமஞ்சள் காளிக்கும் மிகவும் பிடித்ததாக கூறப்பட்டுள்ளது. 
 
ஜாதகரீதியாக ராகுவினால் உண்டாகும் பிரச்சினைக்கும், சனி பகவானால் உண்டாகும் பிரச்சினைக்கும் பரிகாரமாக கூட இந்தக் கரு மஞ்சளானது  பயன்படுத்தப்படுகிறது. இந்த மஞ்சளை கருப்பு கயிறு அல்லது சிகப்பு கயிறை கொண்டு கட்டி கழுத்தில் அணிந்து கொண்டால், கிரக தோஷங்கள் விலகும்.
 
வசூலாகாத பணம் வசூலாக வேண்டும் என்றாலும், இதை நம் கையோடு எடுத்துச் செல்லலாம். நீண்ட நாட்களாக வசூல் ஆகாமல் இருக்கும் கடன் தொகை கூட  வசூலாகிவிடும். நீண்ட நாட்களாக இருந்து வரும் கடன் பிரச்சனைகள் தீர, இதை பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம். 
 
இந்தக் கரு மஞ்சளை சிகப்பு பட்டு துணியில் கட்டி கழுத்தில் அணிந்து கொண்டால், எதிர்பாராத வெற்றிகள் நம்மை வந்து சேரும் என்றும் சாஸ்திரத்தில்  கூறப்பட்டுள்ளது. இந்த கரு மஞ்சளை சிவப்பு பச்சை கலந்த பட்டுத் துணியால் கட்டி பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பண வரவு அதிகரிக்கும் என்றும்  கூறப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments