செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (10:40 IST)

வராகி அம்மனாக உருக்கொண்டது எப்போது தெரியுமா...?

பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தைக் கொண்டிருப்பார். இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் என்பன காணப்படும்.


இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும். சுவப்ன வாராகி மேக நிறமானவர். மூன்று கண்களைக் கொண்டிருப்பார். பிறைச் சந்திரனைச் சூடியிருப்பார். வாள், கேடயம், பாசம், அரிவாள் என்பன  கரங்களில் இடம்பெற்றிருக்கும்.

இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலி ருக்கும். சுத்த வாராகி நீல நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினைக் கொண்டவர். வெண்மையான பற்கள் வெளியே நீட்டப்பட்டவாறிருக்கும். தலையில் பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். சூலம், கபாலம், உலக்கை, நாகம் என்பன கரங்களில் காணப்படும். இரண்யாட்சகன், இரண்ய கசிபுவின் தம்பி இருவருமே அரக்கர்கள்.

மேலான வரங்கள் பெற்ற இவர்கள் பூமிப் பந்தை பந்தாடிக் கொண்டிருந்தார்கள். ஒருமுறை இரண்யாட்சகன், பூமியையே பாதாள உலகத்தில் கொண்டு போய் பதுக்கி வைத்து சகல ஜீவராசிகளை இம்சித்தான். காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவிடம் தேவர்கள் முறையிட்டார்கள்.

சிவபெருமான் அந்தகாசுரனுடன் போர் புரியும் பொழுது சக்தி வராகி அம்மனாக உருக்கொண்டு சிவனின் வெற்றிக்கு வித்திட்டாள். எனவே பகை நாட்டின் மீது படை எடுத்துச் செல்லும் வேந்தர்கள் வெற் றிவேண்டி வழிபட்டுச் செல்லும் தேவியாக வாராகி அம்மன் போற்றப்பட்டாள்.

"வாராஹி காரனோடு வாதாடதே" என்று பழமொழி இவளை நம்பியவருக்கு நல்ல மார்க்கம் தருவாள். வாராக முகம் உடையவள். பின்னிரு கைகளில் கலப்பை, உலக்கை ஏந்தியிருப்பாள். முன்னிரு கைகளும் அபய வரத ஹஸ்தம் கொண்டு அருள்பாலிப்பவள். மேக நிறமுடையவள். கரிய வண்ணத்தை விரும்புபவள். இத்தேவியின் வாகனமாக சிம்மம், எருமை, கரும்புள்ளிமான், சர்ப்பம். காட்டு பன்றி. புலி போன்ற ஒருவித மிருகம், யானை ஆகியவை உள்ளன.