ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

காவல் தெய்வமாக கருதப்படும் வீரபத்திரருக்கு செய்யப்படும் பூஜை முறைகள்...!!

தமிழ்நாட்டில் சில கோவில்களில் மட்டுமே வீரபத்திரர் மூலவராக உள்ளார். பல கோவில்களில் திருச்சுற்றுத் தெய்வமாகவும், எல்லைத் தெய்வமாகவும் இருக்கிறார். பெரும்பாலான கிராமங்களில் காவல் தெய்வம் வீரபத்திரர்தான்.
வீரபத்திரருக்கு எல்லாரும் பூஜை செய்துவிட முடியாது. அதற்கு ஒரு தகுதி வேண்டும். அந்த தகுதிக்கு நிர்தேதோ தாரா யந்திர பூஜை என்று  பெயர்.
 
வீரபத்திரருக்கு நடத்தப்படும் பூஜைகளில் வாய்க்கட்டுப் பூஜை தனித்துவம் கொண்டது. மம்சாபுரம் ஆகாச கருப்பண்ணசாமி கோவிலில் ஸ்ரீ  வீரபத்திரருக்கு வாய்க்காட்டுப் பூஜையே செய்யப்படுகிறது.
 
வீரபத்திரரை வழிபடும் போது பஞ்ச வாத்தியங்கள் இசைக்கப்பட்டால் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைவார். குறிப்பாக பஞ்ச வாத்தியங்களில் ஒன்றான உடுக்கை ஒலி ஒசை ஸ்ரீவீரபத்திரருக்கு மிகவும் பிடிக்கும்.
 
நைவேத்தியங்களில் ஸ்ரீவிரபத்திரருக்கு நெய் கலந்து நன்கு பிசைந்த சோறு தான் மிகவும் பிடிக்கும். இந்த நைவேத்தியத்தை வெள்ளிக் கின்னத்தில் மட்டுமே வைத்து படைக்க வேண்டும்.
 
வீரபத்திரரை ராகு கால நேரத்தில் வழிபட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஞாயிற்றுக்கிழமை சூரிய ஓரை நேரத்திலும், செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரை நேரத்திலும் வீரபத்திரரை வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது.
 
திருபுவனம் ஸ்ரீவீரபத்திரசாமி கோவிலில் பெளவுர்ணமி வழிபாடு மிகவும் சிறப்பாக நடத்தப்படுகிறது.