கடன் பிரச்சனைகள் முழுவதுமாக நீங்க இந்த வழியை பின்பற்றுங்கள்...!
Updated: சனி, 4 மே 2019 (12:45 IST)
வீட்டில் குலதெய்வ படம் வைத்துள்ளவர்கள் அதன் முன்பாக ஐந்துமுக விளக்கில் நெயிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அதன் பிறகு அவரவர் வழக்கம் படி குலதெயவத்திற்கு படையல் இட்டு வழிபட்டு, கடன் பிரச்சனைகள் முழுவதுமாக நீங்க வேண்டும் என்று மனமுருகி குலதெய்வத்திடம் பிரார்த்தனை செய்யவேண்டும்.
இப்படி தொடர்ந்து ஒன்பது பெளர்ணமிகள் குலதெய்வத்திற்கு படையலிட்டு வழிபட்டு வந்தால் உங்கள் கடன் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். குலதெய்வ படம் வீட்டில் இல்லாதவர்கள் குலதெய்வ கோவில் உள்ள திசை நோக்கி இந்த வழிபாட்டை செய்யலாம்.
கடன் பிரச்சனை தீர சில பரிகாரங்கள்:
ஒவ்வொரு வெள்ளியும் காலை குளித்து பூஜைகள் செய்து அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று மகா லட்சுமியை வேண்டி கொண்டு கல் உப்பு வாங்கி வந்து உப்பு பாத்திரத்தில் போடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்து வர வீட்டில் மகா லட்சுமி வரவிற்கு குறைவே இருக்காது.
வெள்ளிக்கிழமை காலை 5 வெற்றிலை 5 கொட்டை பாக்கு 5 ஒரு ரூபாய் நாணயம் அனைத்தும் பூஜையில் வைத்து லட்சுமி வழிபாடு செய்து, பின்பு அனைத்தையும் ஒரு தாளில் மடித்து வைக்கவும். பின்பு அடுத்த வாரம் செய்யும் பொழுது மேற்கண்டதை ஒரு உண்டியலில் போட்டு வைக்கவும்.
வளர்பிறையில் வரக்கூடிய திரிதியை அன்று அன்னதானம் செய்தால் கடன் பிரச்சனை மற்றும் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஒவ்வொரு மாதமும் செய்யலாம்.