செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சகல செல்வங்களையும் பெற்றுத்தரும் சக்கரத்தாழ்வார் வழிபாடு !!

பெருமாள் கோயில்களில் எட்டு கரங்கள் கொண்ட சுதர்சனரையும், 16 கரங்கள் கொண்ட மூர்த்தியையும், 32 கரங்கள் கொண்ட மகா சுதர்சனரையும் காணலாம்.


பொதுவாக 8 அல்லது 16 கரங்களுடன் வீறு கொண்டு எழும் தோற்றத்துடன் அறுகோண சக்கரத்தில் சக்கரத்தாழ்வார் காட்சி தருவார். 
 
‘ஷட்கோண சக்கரம்’ எனும் ஆறு கோணத்தின் மத்தியில் உக்கிர வடிவ சுதர்சனமும், திரிகோண சக்கரம் எனும் முக்கோணத்தில் யோக நரசிம்மரும்  அருள்பாலிக்கின்றனர். 
 
சுதர்சனர் தனது 16 திருக்கரங்களில் சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம், அக்னி, கத்தி, வேல், சங்கம், வில், பாசம், கலப்பை, வஜ்ரம், கதை, உலக்கை, சூலம் என 16 வகையான ஆயுதங்களுடன் மகா சுதர்சன மூர்த்தியாக காட்சி தருகிறார். சுதர்சனர் வழிபாடு மிகவும் சிறப்பானதாகக் கூறப்படுகிறது. 
 
சிவன் கோயில்களில் சிவம்சமான பைரவரை போன்றே விஷ்ணுவின் அம்சமான சக்கரத்தாழ்வார் நமது சகல துன்பங்களிலிருந்தும் விடுவிக்கும் சக்தி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே நமக்கு நவக்கிரகங்களின் தரிசனம் கிடைக்கும். 
 
பெருமாள் கோயில்களில் நவக்கிரகங்களுக்குப் பதிலாக, பெருமாளையும் சக்கரத்தாழ்வாரையும் தரிசனம் செய்தாலே நவக்கிரகங்களின் அனுக்கிரகம் கிடைத்துவிடும்  என்பது வைஷ்ணவர்களின் நம்பிக்கை.  
 
ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வணங்குபவர்களுக்கு நோய், எதிரி, விரயம், மரணம் ஆகிய பயம் நீங்குவதோடு தரித்திரியத்தைப் போக்கி சகல செல்வங்களும் அளிக்கும்  என்பது நிதர்சனம். 
 
முக்கியமாக இன்றைய கோச்சாரத்தில் சந்திரனும் சுக்கிரனும் பரிவர்த்தனை பெறுவதால் சந்திர சகோதரியான மகாலக்ஷ்மியின் அருள் நிறையும் என்பது நிதர்சனம்.