சூரிய நமஸ்காரம் செய்வதால் என்ன பலன்கள் உண்டாகும் தெரியுமா...?

Surya Namaskar
Sasikala|
காலையில் தீபம் ஏற்றுவது என்பது நமது முன்னோர்கள் தவறாமல் செய்து வந்த ஒரு விஷயம் தான்.செல்லும் காரியம் தடைகள் இன்றி நல்லபடியாக முடிக்க வீட்டில் காலையில் தீபம் ஏற்றி சூரிய பகவானை வணங்கும் பழக்கம் இருந்து வந்தது. 

வீட்டில் காலையில் தீபம் ஏற்றி சூரிய பகவானை வணங்கும் பழக்கம் இருந்து வந்தது. சூரிய நமஸ்காரத்தை இரு உள்ளங்கைகளை சேர்த்து வான் நோக்கி  காண்பித்து பின்னர் கைகூப்பி வணங்குவார்கள். உள்ளங்கையில் பிரபஞ்சத்தின் நல்லவற்றை கிரகிக்கும் ஆற்றல் உண்டு. இதனால் அவர்களின் உடலும், மனமும்  தெளிவாக இருந்தது.
 
சூரிய வணக்கம் இன்று உடல் ஆரோக்கியம் தரும். சூரியன் உதயமாகும் முன்னர் ஆரஞ்சு வண்ணத்தில் மேல் எழும் சூரியக் கதிர்கள் அருணோதயம் என்று கூறுவார்கள். இந்த அருணோதய நேரத்தில் விளக்கு ஏற்றி வைத்தால் கடவுளின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கும். 
 
அருணோதயத்தில் தான் பூக்கள், தன் இனிய இதழ்களை விரித்து அழகாய் மலரும். பூக்கள் மலர்வதை அந்த நேரத்தில் நீங்கள் காண முடியும். செடி, கொடி, மரம் என்று தாவரங்கள் அனைத்திற்கும் இந்த நேரத்தில் தான் உயிர் தன்மை அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் துவங்கும் செயல்கள் நன்மைகளை பெற்றுத் தரும். அதே போல் சூரியன் மறையும் நேரத்திற்கு முன்னர் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். மறையும் சூரியக் கதிர்கள் மூலமும் சில தாவரங்கள் உயிர்பெறும். 
 
லக்ஷ்மி தேவி வீட்டில் இருந்தால் தான் நன்மைகளும், செல்வ வளமும் இல்லத்தில் நிறைந்து இருக்கும். தினமும் தவறாமல் மாலை சூரியன் மறையும் நேரத்திற்கு முன்னர் தீபம் ஏற்றிவிட வேண்டும். இதனால் அஷ்ட லக்ஷ்மிகளும் வீட்டிற்குள் வருவார்கள். 
 
நமது இல்லத்தில் எப்போதும் லக்ஷ்மி கடாட்சம் இருக்கும். எண்ணங்கள் தான் வாழ்க்கை. நம்பிக்கையுடன் கூடிய பிரார்த்தனைகள் எந்த நேரத்தில் செய்தாலும்  பலிக்கும். ஆனாலும் சூரிய பகவானின் உதயமும், அஸ்தமனமும் நம் பிரார்த்தனைகளை பரிபூரணமாக ஏற்கும் ஆற்றல் கொண்டது.


இதில் மேலும் படிக்கவும் :