மரகத கல்லினால் செய்யப்பட்ட சிவ லிங்கத்தை வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள் !!
மரக லிங்கத்தை வழிபட்டு வர ஆரோக்கியம், கல்வி, பெரிய பதவி, அரசருக்கு அடுத்த பதவியைத் தரக்கூடிய யோகத்தைப் பெறலாம். அதோடு நம்முடைய தொழில், வியாபாரம் விருத்தி அடையவும், உத்தியோகத்தில் நீங்கள் நினைத்த உயரத்தை அடையலாம்.
நம்முடைய சகல தோஷங்களும் நீங்கி வாழ்க்கையில் அனைத்து நன்மைகளையும் பெறலாம். மேலும் இந்த மரகத லிங்கத்தை இந்திரன் வழிப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு மரகதலிங்கத்தை வழிபட்டால் தீராத வியாதிகள் குணமடையும் என்பது நம்பிக்கை.
மும்மூர்த்திகளில் ஒருவராக சிவபெருமானுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல சிவாலயங்கள் உள்ளன. பழமை வாய்ந்த ஒவ்வொரு சிவன் கோயிலும் ஒவ்வொரு தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றன. விலை உயர்ந்த ரத்தினங்களில் மரகதம் ஒன்று. அப்படிப்பட்ட மரகத கல்லினால் செய்யப்பட்ட சிவ லிங்கம் உள்ள சில கோயில்கள் உள்ளன.
மரகத லிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்து அதனை அருந்தினால் மிகச்சிறந்த மருத்துவ சக்தியாக இருக்கும். அதே போல மரகத லிங்கத்தின் மேல் சாற்றப்படும் சந்தனத்தைப் பூசிக்கொள்வதால் நல்ல மருத்துவ பலனைத் தரும் என்று கூறப்படுகிறது.