வியாழன், 28 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: சனி, 21 மே 2022 (17:19 IST)

முருகப்பெருமானுக்கு சஷ்டி விரதமிருந்து வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் !!

வைகாசி மாதத்தில் வரக்கூடிய இந்த தேய்பிறை சஷ்டியில் முருகனை நினைத்து விரதமிருந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய வேண்டுதல்களும் வேண்டியபடி அப்படியே பலிக்கும் என்கிற ஐதீகம் உண்டு.


முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த இந்த சஷ்டியில் நாம் கொஞ்ச நேரம் மனம் உருகி முருகனுடைய மந்திரங்களை உச்சரித்து அல்லது ‘ஓம் சரவணபவ’ என்னும் அவருடைய சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால் நமக்கு வந்த துன்பம் எல்லாம் மாயமாய் மறைந்துவிடும். வேண்டிய வரத்தை வேண்டியபடி கொடுக்கக் கூடியவர் சிவபெருமான். அவருடைய மைந்தனும் அவ்வகையில் வேண்டிய வரத்தை நமக்கு வேண்டியபடி கொடுப்பார்.

இந்த தேய்பிறை சஷ்டியில் முருகன் கோவிலுக்கு சென்று அங்குள்ள அர்ச்சகரிடம் முருகனுக்கு அபிஷேகம் செய்ய தேவையான பொருட்களில் உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.

குறிப்பாக இளநீர் மற்றும் தேன் போன்ற வற்றை வாங்கி கொடுப்பதன் மூலம் சுபீட்சம் பெருகும். அறியாமல் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி உங்களுக்கு புண்ணிய பலன்கள் இரட்டிப்பாகும் அற்புதமான ஒரு பரிகாரமாக இந்த சஷ்டி விரதம் இருந்து வருகிறது.

சஷ்டியில் விரதம் இருப்பவர்க ளுக்கு பிள்ளைப்பேறு உண்டாகும் என்கிற ஐதீகமும் உண்டு. இதைத் தான் ‘சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்’ என்று கூறப்படுகிறது.