1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 15 ஜூன் 2024 (12:15 IST)

ஆனி தமிழ் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கும்பம்!

Monthly astro
கிரகநிலை:
ராசி ஸ்தானத்தில் சனி - தனவாக்கு ஸ்தானத்தில் ராகு - தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர், புதன், சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.




கிரகமாற்றம்:
ஆனி மாதம் 12ம் தேதி (26.06.2024) புதன்கிழமை அன்று பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து புத பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்
ஆனி மாதம் 23ம் தேதி (07.07.2024) புதன்கிழமை அன்று பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்
ஆனி மாதம் 27ம் தேதி (11.07.2024) வியாழக்கிழமை அன்று தைரிய ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்
ஆனி மாதம் 32ம் தேதி (16.07.2024) செவ்வாய்கிழமை அன்று பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து சூர்ய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்

எதிர்காலத்தை மனதில் கொண்டு திட்டமிட்டு செயலாற்றும் கும்ப ராசியினரே இந்த மாதம் அடுத்தவர்களுக்கு உதவப் போய் அதனால் அவதிப்பட்ட நேரலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பணிபுரியும் இடத்தில் ஆயுதங்களை கையாளும்போதும் கவனம் தேவை. செலவு அதிகரிக்கும். மனதில் இருந்த உற்சாகம் குறையும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்குவர தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர் கள் அலைச்சலையும், வேலை பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம்.

குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதும் நல்லது. சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எச்சரிக்கை தேவை.

பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. செலவு அதிகரிக்கும். வீண் கவலை உண்டாகலாம்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலையை தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும்.

அவிட்டம் 3, 4 பாதம்:
தொழில் வியாபாரம் நன்கு நடக்க தேவையான உதவிகள் கிடைக்கும். வாடிக்கையாளர் தேவை அறிந்து பொருள்களை அனுப்பி அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயர் பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் விரும்பும் பொருள்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள்.

சதயம்:
வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவது, புதுப்பிப்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். பெண்களுக்கு இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு.

பூரட்டாதி 1, 2, 3 பாதம்
அரசியல்வாதிகளுக்கு இனிமையான செய்திகள் தேடி வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி கிடைக்கப்பெறுவீர்கள். புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. மாணவர்கள் சகமாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். கல்வியில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: சனிக்கிழமையில் எள் சாதம் சனி பகவானுக்கு நைவேத்தியம் செய்து காகத்திற்கு வைக்க கஷ்டங்கள் குறையும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: 12, 13
அதிர்ஷ்ட எண்கள்: 27, 28
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, வியாழன் ; தேய்பிறை: புதன், வியாழன்