வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By
Last Modified: சனி, 14 ஏப்ரல் 2018 (11:06 IST)

2018 தமிழ் புத்தாண்டு பலன்கள் : ரிஷபம்

பலம்: (கிருத்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிதம் 1, 2 பாதங்கள்)
 
சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்டு மஹா லட்சுமியின் அருள் பெற்ற ரிஷப ராசி அன்பர்களே, இந்த ஆண்டு சிலருக்கு புதிய வீடுகளுக்கு மாறும் சூழ்நிலை  உண்டாகும். பணவரவும் திருப்திகரமான நிலையிலேயே இருக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். 
உங்களின் ஆழ்ந்த நுண்ணறிவை அனைவரும் பாராட்டுவார்கள். உங்கள் அதிகாரமும், பதவியும் உங்களைப் பலப்படுத்தும். உங்கள் மதிப்பு மரியாதையும் உயரும். செய்தொழிலில் புதிய மாற்றங்களைப் புகுத்துவீர்கள். புதிய கடன்களும் கிடைக்கும். சிந்தனையில் தெளிவும் செயலில் வீர்யமும் பெற்று உங்களது  செயல்களை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். உடலாரோக்யமும் சிறப்பாகவே தொடரும். வழக்கு விவகாரங்களில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். மனதில் காரணமில்லாமல் குடிகொண்டிருந்த குழப்பங்களும் மறையும்.
 
பலவீனம்:
 
வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களிடம் கடன் பாக்கிகள் அதிகமாகாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். இல்லையெனில் வசூல் செய்வது கடினம்.  புதிய  ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் முழுமையாகப் படித்துப் பார்த்து கையெழுத்திடுவது நல்லது. உடல் நிலையில் கவனமுடன் இருக்க வேண்டும். தேவையில்லாமல் யாரிடமும் வாதாட வேண்டும். உங்கள் வேலையில் முழு கவனமுடன் இருந்தாலே உங்கள் பிரச்சனைகள் பாதி  குறையும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. மதிப்பெண்கள் அடிப்படையில் உங்களுக்கு 60% நல்ல பலன்கள் கிடைக்கும்.
 
பரிகாரம்: 
 
வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும். பணப் பிரச்சனை நீங்கும். உறவினர் மற்றூம்  நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும்.