`Little Tommy Tucker... என்ற யு.கே.ஜி-யில் தனது டீச்சர் மனப்பாடமாக சொல்லிக்கொடுத்த பாடலை பாடியபடியே விளையாடிக் கொண்டிருந்தான் சதீஷ்.எதிர்வீட்டு அபினவ், தீபாவளி நெருங்குவதற்கு 10 நாட்கள் முன்பாகவே அப்பா வாங்கிக் கொடுத்த துப்பாக்கியில் (சாதாரண துப்பாக்கிதான்) பொட்டு வெடியையும், ரோல் கேப் வெடியையும் வெடித்துக் கொண்டிருந்ததை பார்த்த சதீஷ் உடனே அப்பாவிடம் சென்று கேட்டான்.webdunia photoWD `அப்பா. அபினவ் மட்டும் இப்பவே பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கிறான். எனக்கும் துப்பாக்கி, பட்டாசு...