வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. குழந்தைகள் உலகம்
  3. எழுச்சிக் கட்டுரைகள்
Written By Sivalingam
Last Modified: வியாழன், 16 பிப்ரவரி 2017 (07:34 IST)

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் உள்பட பல்வேறு காரணங்களுக்காக தினமும் பாக்கெட் மணி கொடுப்பது என்பது தற்போது அனைத்து குடும்பங்களிலும் சாதாரணமாகிவிட்டது. ஆனால் அந்த பாக்கெட் மணியின் குறிப்பிட்ட ஒரு அளவை சேமிக்க அவர்களுக்கு ஆலோசனை கூறுவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை ஆகும்



இந்நிலையில் குழந்தைகளுக்கு பாக்கெட் மணி கொடுக்கும்போது ஒருசில முறைகளை கையாண்டால் நல்லது. அவை என்னவென்று பார்ப்போமா!

1. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பாக்கெட் மணியை பிக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதற்கு மேல் ஒரு பைசாக்கூடா கேட்டால் கூட முக்கிய காரணம் இன்றி தரக்கூடாது என்பதில் பெற்றோர்கள் கண்டிப்பாக இருக்கவேண்டும்.

2. குழந்தைகள் அடம்பிடிக்கிறார்ள் என்பதற்காக கூடுதல் பணத்தை கொடுக்க வேண்டாம். ஒருமுறை அடம்பிடித்து குழந்தைகள் கூடுதலாக வாங்கிவிட்டால் பின்னர் அதே முறையை அடுத்தடுத்து கடைபிடிப்பார்கள்

3. விலை உயர்ந்த பொருளை குழந்தைகள் கேட்கும்போது பாக்கெட் மணியில் இருந்து சேமித்து நீ தொகையை சேமித்து கொள், மீதியை நான் போட்டு வாங்கித்தருகிறேன் என்று சொல்லுங்கள். இதனால் குழந்தைகள் சேமிக்க தொடங்குவார்கள்

4. பாக்கெட் மணியைச் சேமிக்க குழந்தைகளுக்கு அழகழகான உண்டியல்களை வாங்கிக்கொடுங்கள். அந்த உண்டியலை பார்த்த உடனேயே குழந்தைகளுக்கு சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். குழந்தைகள் சேமித்துவைத்த பணத்தைக் கொண்டு ஒரு பொருள் வாங்கும்போது குழந்தைகளுக்கு தாங்களே சம்பாதித்து வாங்கியதுபோல ஃபீல் கிடைக்கும்.

5. சிறு வயதில் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால் பெரியவர்களாகும் போது பணத்தின் குழந்தைகளுக்கு புரியும். அதை புரிய வைக்க வேண்டியது பெற்றோர்களின் கடமையும் கூட