ஒலிம்பிக் போட்டி: மயிரிழையில் பதக்கத்தை இழந்த இந்தியா
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா 20.4 புள்ளிகள் வித்தியாத்தில் பதக்கத்தை இழந்தார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது இந்தியா. 3வது நாளான நேற்று துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா சார்பில் இரண்டு வீரர்கள் கலந்துக் கொண்டனர்.
அபினவ் பிந்த்ரா, ககன் நரங் உள்பட 50 வீரர்கள் கலந்து கொண்ட துப்பாக்கி சுடுதல் போட்டியில், தகுதி சுற்றில் அபினவ் பிந்த்ரா 7வது இடத்தை பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ககன் நரங் 27வது இடத்தை பிடித்து தொடக்கத்திலே வெளியேறினார்.
அபினவ் பிந்த்ரா இறுதி சுற்றில் சற்று தடுமாறி 20 புள்ளிகள் வித்தியாத்தில் 4வது இடத்தை பிடித்தார். 33 வயதான அபினவ் பிந்த்ராவுக்கு இது 5வது மற்றும் கடைசி ஒலிம்பிக் போட்டியாகும். கடைசி ஒலிம்பிக் போட்டியில் துயரத்துடன் வெளியேறினார் அபினவ் பிந்த்ரா.