மனிதனின் மனம் கடுகுப்பொட்டலம் போன்றது. அந்தப் பொட்டலம் கிழிந்து கடுகு நாலாபுறங்களிலும் ஓடிவிட்டால் அதை ஒன்றுசேர்ப்பது சிரமம். அதுபோல, மனம் உலகவிஷயங்களில் சிதறத் தொடங்கினால் அதைக் குவித்து ஒருமுகப்படுத்துவது சுலபமானதல்ல. * கடவுளைத் தேடுபவன் கடவுளை அடைகிறான். செல்வத்தையும், செல்வந்தர்களையும் நாடுபவன் அவற்றையே அடைகிறான். வாழ்வில் எதை விரும்பி நாடுகிறார்களோ அதையே அடைவார்கள். * ஒளியை உணர்பவன் இருளையும் உணர்கிறான். பாவத்தைப் பற்றித் தெரிந்தவனுக்குப் புண்ணியமும் இன்னதென்று...