1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. அருளுரை
Written By

ஆஞ்சநேயரை வீட்டில் வழிபட கூடாது என்று கூற காரணம் என்ன?

ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து வழிபாடு செய்யக்கூடாது என்று சொல்வதுண்டு. ஏனெனில் பிரம்மச்சாரியான ஆஞ்சநேயரை வழிபாடு செய்பவரும் திருமணம் ஆகாமல் பிரம்மச்சாரியாகவே இருந்து விடுவார் என்ற மூடநம்பிக்கை பரவி இருப்பதே இதற்கு காரணம் ஆகும். 
அனுமன் ராமபிரானின் பக்தன் மட்டுமல்லாமல் ராமனின் உற்ற நண்பரும் ஆவார். சிவபெருமானின் அம்சமான ஆஞ்சநேயர் ஒரு பிரம்மச்சாரி மட்டுமல்ல ஒரு  சிரஞ்சீவியும் ஆவார். பிரிந்து கிடந்த ராமன் மற்றும் சீதையை மீண்டும் ஒன்று சேர்த்தவர் வாயு புத்திரனான ஆஞ்சநேயரே ஆவார்.  
 
இந்திரஜித்தின் நாகாஸ்திரத்தினால் உயிருக்கு போராடிய லட்சுமணனை சஞ்சீவி மூலிகையை கொண்டு வந்து உயிர்ப்பித்தவரும் ஆஞ்சநேயரே. தமது நண்பன்  சுக்ரீவனுக்கும் நல்வழி காட்டியவர் ஆஞ்சநேயரே. நம் வீடுகளில் இருக்க வேண்டிய மூர்த்திகளில் ஆஞ்சநேயரும் ஒருவர். பஞ்சமுக ஆஞ்சநேயரே வீட்டில் வைத்து வழிபாடு செய்யத்தக்கவர். 
 
ஆஞ்சநேயரின் வடிவங்களில் சஞ்சீவிராய ஆஞ்சநேயரே மிகவும் வலிமை மிக்கவர். இத்தகைய ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து வணங்கும் போது கட்டாயம்  ராமபிரானின் படம் இருக்க வேண்டும். வழிபாடு செய்யும் காலத்தில் ராம நாமத்தினை நாம் சொல்ல வேண்டும். நமது அனைத்து விதமான கோரிக்கைகளையும் அவரிடம் வைத்து வணங்க வேண்டும். கோரிக்கைகள் ஏதுமில்லாமல் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யக்கூடாது. ராமனை துதிக்கும் மக்களின் துதியை கேட்பதற்காகவே ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக வாழ்ந்து மக்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.