ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 25 ஜூலை 2018 (14:59 IST)

ஆடி வெள்ளியில் தோன்றவுள்ள முழு சந்திர கிரகணம்

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட ரத்த சிவப்பு நிலா வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 27ஆம் தேதியன்று) வானில் தோன்றுகிறது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி ஒருமுறை பிளட் மூன் வந்து போனது. 
தோன்றவுள்ள இந்த முழு சந்திர கிரகண நாளில் பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், கிருத்திகை, ரோகிணி, உத்திரம், ஹஸ்தம், நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்வது நல்லது என ஜோதிடர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் சந்திர கிரகணம் முடிந்த பின்னர் ரிஷபம், சிம்மன், கன்னி, மகரம்,  கும்பம், ஆகிய ராசிகளில் பிறந்தவர்களும் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்
 
வருகின்ற ஜூலை 27 ஆம் தேதி ஆடி வெள்ளிக்கிழமையன்று வானில் தோன்ற உள்ள பிளட் மூன் மிக நீண்ட நேரம் காட்சியளிக்கும். இந்த ஆண்டிலேயே ரத்தச்  சிவப்பு நிலா தோன்றப்போவது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி ஒருமுறை பிளட் மூன் வந்து போனது. அன்று வரும்  சூப்பர்மூன் தான் இந்த நூற்றாண்டில் மிக அதிக நேரம் வானில் தோன்றும் ப்ளட் மூன் என்னும் சிறப்புக்குரியது. இதற்கு முன்பு வந்தது 58 நிமிடங்கள் 58  நொடிகள் வானில் இருந்தது. ஆனால் இப்போது வரப்போகும் சூப்பர் மூன் அதிக நேரம் வரை வானில் இருக்கும். 
 
வானிலே சிவப்பு நிலா ரத்த சிவப்பு நிறத்தில் தோன்றவுள்ள இந்த சந்திர கிரகணம் ஜூலை 27ஆம் தேதியன்று சூரிய அஸ்தமன நேரத்துக்கும் நள்ளிரவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் சந்திர கிரகணம் தெரிய வாய்ப்பு உள்ளது. இந்த கிரகணம் இந்தியாவில் நன்றாக தெரியும் என்பதால் அனைவரும் பார்க்கலாம்.
 
இந்த சந்திர கிரகணம் தினத்தில் உடல்நலம், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பார்க்கக் கூடாது என்று ஜோதிடர்கள் அறிவுறுத்தியுள்ளனர். முழு சந்திர கிரகணம்  இரவு 11.53 க்கு தொடங்கும் கிரஹணம் நள்ளிரவு 12.59க்கு முழு கிரகணமாக வானில் நீடிக்கிறது. முழு கிரஹண மத்தி ஜூலை 28ஆம் தேதி நள்ளிரவு 1.51 வரை  நீடிக்கிறது. நள்ளிரவு 2.43க்கு முழு சந்திர கிரகணம் முடிவடைகிறது. இது இந்த நூற்றாண்டின் மிக நீண்ட முழு சந்திர கிரகணம் என வானியல் ஆய்வாளர்கள்  தெரிவிக்கின்றனர்.
 
கிரகணம் முடிந்த பின் குளிக்கவும் வழக்கத்தை விடவும் அதிக நேரம் இந்த முறை சந்திர கிரகணம் இருக்கும் என்பதனால், இது மற்ற கிரகங்களுக்கும் சில பாதிப்புகள் ஏற்படும். பொதுவாக சந்திர கிரகணம் மற்ற கிரகங்களைப் பாதிக்கும் என்பதால் இயல்பாகவே அதன் பாதிப்பு நமக்கும் இருக்கும். அதிலும் சில  குறிப்பிட்ட ராசிகளை சந்திர கிரகணம் பாதிக்கும். அதனால் தான் பொதுவாக சந்திர கிரகணம் முடிந்தவுடன் எல்லோரும் தலைக்கு குளித்துப் பின், சாப்பிட  வேண்டும் என்பது வழக்கத்தில் உள்ளது.