சிதம்பரம் தில்லை ஸ்ரீ நடராஜர்
-கா. அய்யநாதன், புகைப்படங்கள்: சீனி
|
என்று தெய்வ அருள் பெற்ற திருநாவுக்கரசர் பக்திப் பெருக்குடன் பாடித் தொழுத புண்ணியத் திருத்தலம் தில்லையம்பலம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருக்கோயில்.
மொழிகள் அனைத்திற்கும் மூலம் ஒலியே. அதுபோல் இப்பிரபஞ்சத்தின் மூலமாய் இருப்பது ஓம் எனும் பிரணவ மந்திரமே என்றுரைத்து அந்த வடிவாகவே இத்திருத்தலத்தில் எழுந்தருளிய சிவபெருமானை நினைத்தும், நேரில் கண்டும் வழிபடாத சைவர்கள் எவருமிலர் என்று கூறப்படும் பெருமை பெற்றது இத்திருத்தலம்.
சிவபெருமானின் பஞ்ச பூத திருத்தலங்களில் இத்தலம் ஆகாசத்திற்குரியதாகப் போற்றப்படுகிறது. இங்கு தனது பக்தர்களுக்கு ஜோதி வடிவாக இறைவன் காட்சி தந்ததாகவும் கூறப்படுவதுண்டு. எனவே, இத்திருக்கோயிலையே அக்னி மூலைக்கு அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது.
| webdunia photo | WD |
சிவபெருமான் தனது பக்தர்களுக்கு தன்னை வெளிபடுத்திய விந்தையை இங்கு சிதம்பர ரகசியமாக கூறி காட்டுகின்றனர்.
|
இத்திருக்கோயிலின் நான்கு அழகிய இராஜ கோபுரங்களும், கோயிலிற்குள்ளிருக்கும் தூண்களும் சிற்பக் கலையின் அழியாத அழகுடன் இன்றளவும் உள்ளன. தில்லையம்பலத்தார் நாட்டிய கோலத்தில் நின்று அருள்பாலிக்கும் இத்திருக்கோயிலின் தூண்களில் செதுக்கப்பட்டுள்ள நடன சிற்பங்கள், பரத நாட்டியத்தின் நுணுக்கங்களை துல்லியமாக கற்றுத்தரும் பாடங்களாக உள்ளன. நடனக் கலையை வெளிப்படுத்தும் சிற்பக் கலையும், ஆன்மிகமும் ஒன்றிணைந்து மனங்கமழும் அற்புத திருத்தலம் தில்லை நடராஜர் திருக்கோயில்.
| webdunia photo | WD |

