Daily Horoscope
✕

செ‌ப்ட‌ம்‌ப‌‌ர் மாத எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்க‌‌ள் : 3, 12, 21, 30

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப. ‌வி‌த்யாதர‌ன்

Written By Webdunia
Published: சனி, 30 ஆகஸ்ட் 2008 (19:34 IST)
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் காசுபணம் புரளும். என்றாலும் கொஞ்சம் செலவு இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

கணவன் -மனைவிக்குள் அனுசரித்துப் போங்கள். பிள்ளைகளின் உடல் நலத்தில் அக்கறைக்காட்டுங்கள். அவர்களின் ஆசைகளை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். புண்ணி ய‌த் தலங்கள் சென்று வருவீர்கள்.

அரசுக் காரியங்களில் அலட்சியப் போக்கு வேண்டாம். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து போங்கள். இங்கிதமாக பேசி கடினமான வேலைகளைக் கூட முடிப்பீர்கள். வி.ஐ.பிகளின் சந்திப்பு நிகழும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் வந்துபோகும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் குடும்ப விசயங்களைப் பற்றி சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம். வியாபாத்தில் அதிரடி முடிவுகள் வேண ்ட ாம்.

பாக்கிகளை நயமாக பேசி வசூலிப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிட்டும். உத்யோகத்தில் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிக்கப் பாருங்கள். மேலதிகாரியின் ஆதரவு உண்டு. சக ஊழியர்களைப் பற்றி குறைக் கூறவேண்டாம். கலைத்துறையினர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கையிருப்பு கரந்தாலும் உற்சாகம் தரும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 1, 9, 10, 18, 19, 27, 28
அதிர்ஷ்ட எண்கள் : 1, 9
அதிர்ஷ்ட நிறங்கள் : மெருன், கிரே
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், வெள்ளி

எல்லாம் காட்டு

இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் கோபாஷ்டமி பண்டிகை.. கோபூஜை செய்ய சரியான நேரம் எது?

நாளை திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்.. 4,100 போலீஸார் குவிப்பு... கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்...

இன்று தீபாவளி திருநாள்.. லட்சுமி பூஜை செய்யும் நேரம் குறித்த தகவல்...

தெளிவையும் ஞானத்தையும் நோக்கியப் பயணமாக அமையட்டும் - சத்குருவின் தீபாவளி வாழ்த்து!..

தீபாவளிக்கு முன்பு எந்த பொருளையெல்லாம் தூக்கி வீசணும்? - வாங்க பார்ப்போம்