Daily Horoscope
✕

செ‌ப்ட‌ம்‌ப‌‌ர் மாத எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்க‌‌ள் : 6, 15, 24

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப. ‌வி‌த்யாதர‌ன்

Written By Webdunia
Published: சனி, 30 ஆகஸ்ட் 2008 (19:29 IST)
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தன்னம்பிக்கை துளிர் விடும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கையில் காசுப் பணம் புரளும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள்.

பேசில் கம்பீரம் பிறக்கும். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். உடன்பிறந்தவர்களால் நன்மையுண்டு. பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். சொந்தம்பந்தங்களுக்கு மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்த உதவிகள் தக்கசமயத்தில் கிடைக்கும். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படு.

வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது நபர்களின் சந்திப்பு கிட்டும். பாக்கிகள் வசூலாகும். மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். கூட்டுத்தொழிலில் மகிழ்ச்சியுண்டு. உத்யோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீகள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கோபத்தையும், குறை கூறுவதையும் தவிர்த்தால் வெற்றி பெறும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 6, 9, 15, 18, 24, 27
அதிர்ஷ்ட எண்கள் : 6, 9
அதிர்ஷ்ட நிறங்கள் : சிவப்பு, ஊதா
அதிர்ஷ்ட கிழமைகள் : புதன், வெள்ளி

எல்லாம் காட்டு

சத்குருவிற்கு உலக அமைதி விருது: மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வழங்கினார்

ரூ.5,000 வரை உடனடி அபராதம் விதிக்கப்படும்.. சபரிமலை பக்தர்களுக்கு கேரள அரசு எச்சரிக்கை...

இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் கோபாஷ்டமி பண்டிகை.. கோபூஜை செய்ய சரியான நேரம் எது?

நாளை திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்.. 4,100 போலீஸார் குவிப்பு... கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்...

இன்று தீபாவளி திருநாள்.. லட்சுமி பூஜை செய்யும் நேரம் குறித்த தகவல்...

Show comments