திருமணம் செய்துக்கொள்ள மிரட்டிய வாலிபர்: விஷம் குடித்த மாணவி

திருமணம் செய்துக்கொள்ள மிரட்டிய வாலிபர்: விஷம் குடித்த மாணவி


Abimukatheesh| Last Updated: வியாழன், 21 ஜூலை 2016 (08:34 IST)
ராசிபுரம் அருகே இளைஞர் ஒருவர் திருமணம் செய்ய வற்புறுத்தி மிரட்டியதால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்துள்ளார்.

 

 
ராசிபுரம் கோனேரிப்பட்டி பகுதியை சேர்ந்த சாந்தி (16) அவரது உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். 
 
சாந்தி தினந்தோறும் பள்ளிக்கு செல்லும்போது அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார்(21) என்பவர் திருமணம் செய்துகொள்ளும்படி தொந்தரவு செய்து வந்துள்ளார்.
 
இதில் விரத்தி அடைந்த சாந்தி நேற்று கொசுவை ஒழிப்பதற்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஆல்அவுட்டை குடித்து விட்டு பள்ளிக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு மயக்கம் ஏற்பட்டு, பின்னர் அவரை ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
 
இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சுரேஷ் குமார் அந்த மாணவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கடந்த ஆறு மாதமாக தொந்தரவு செய்து வந்ததாக தெரிய வந்ததுள்ளது. இதையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :