புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 14 ஏப்ரல் 2021 (14:12 IST)

ஒர்க் ஃப்ரம் ஹோம் முறையைப் பின்பற்றலாம் - ராதாகிருஷ்ணன்!

ஒர்க் ஃப்ரம் ஹோம் முறையைப் பின்பற்றலாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுரை. 

 
கொரோனாவுக்கான தடுப்பூசிகள் இந்தியாவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஆனால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இருக்கும் ஆர்வம், 45 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது பிரதமர் மோடியின் ஆலோசனைப் படி ஒவ்வொரு மாநிலத்திலும் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 16 ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடக்க உள்ளது. இதை முன்னிட்டு நாளொன்றுக்கு 2 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட உள்ளன. வழக்கமாக தமிழகத்தில் நாளொன்றுக்கு 1.25 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
 
இதனிடையே சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுமுடக்கம் போடும் சூழல் தற்போது இல்லை. வெண்டிலேட்டர் தேவையான அளவு இருக்கிறது. 2 வாரங்கள் மக்கள் ஒத்துழைப்பு தேவை. வீட்டில் இருந்து யாரால் வேலை பார்க்க முடியுமோ அவர்கள் தாமாக முன்வந்து வீட்டிலிருந்து வேலைப்பார்க்கலாம். அரசு உத்தரவிட வேண்டும் என எதிர்ப்பார்க்க வேண்டியதில்லை. அதன் மூலம் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.