வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 20 மே 2020 (21:32 IST)

வேலை கேட்டு பெண்கள் போராட்டம்… பயத்தில் டாஸ்மாக் கடை மூடல் !

சீனாவில் இருந்து உலகம் முழுவதும்  பரவியுள்ள கொரொனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன, 50 லட்சம் மக்கள் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவில் மூன்றாவது கட்டமாக ஊரடங்கு வரும் மே 17 ஆம் தேதி வரை  அமல்படுத்தப்பட்டது.  அதன் பிறகு 4ஆம் கட்ட பொது ஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு  உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டாஅர வளர்ச்சி அலுவலரிடம் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கிராமப்புற தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் சுமார் 600 தொழிலாளர்கள் மனு கொடுத்திருந்தனர்.

இவர்களில் 100 பேருக்குக் கூட  வேலை வழங்கவில்லை என தெரிகிறது.இந்நிலையில் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றில அலுவலகம் நோக்கிப் பெண்கள்பலர் ஊர்வலமாகச் சென்றனர்.

அப்பொது, ஜவுளிப் பூங்கா அருகே  ஒரு டாஸ்மாக் கடையை முற்றிகையிட்டனர். பின்னர் அக்குள்ள சரக்குகளை உடைத்து விடுவார்களோ என்ற பயத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் கடையை அடைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் பெண்களை கலைந்து போகச் சொன்னார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.