செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 மே 2020 (15:35 IST)

முதல்வர் வீட்டு பெண் காவலருக்கு கொரோனாவா? – காவல் ஆணையர் விளக்கம்!

தமிழக முதல்வர் இல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலருக்கு கொரோனா இருப்பதாக வெளியான செய்து குறித்து காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் முதலமைச்சர் இல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணுக்கு கொரோனா இருப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள காவல் ஆணையர், அந்த பெண் காவலர் முதல்வர் இல்லத்தில் பாதுகாப்பு பணியில் இல்லை என்றும், கிரீன்வேஸ் சாலையில் கடந்த 30ம் தேதி வரை காவல் பணியில் இருந்தவர் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 6ம் தேதி அன்று உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அந்த பெண்ணை சோதித்ததில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது நிரூபணமானதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே பெண் காவலருக்கு கொரோனா இருப்பதாக வெளியான செய்தி உண்மையில்லை என கூறப்பட்டுள்ளது.