1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: புதன், 13 ஜூலை 2016 (12:48 IST)

பெண் அடித்து கொலை: 2 பெண்கள் கைது

திருப்பத்தூர் அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் பெண்ணை தாக்கி கொலை செய்த 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.


 


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருஉடையார்பட்டியை சேர்ந்தவர் பேரின்பம் வெளிநாட்டுநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சீதாலட்சுமி (45). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.  இந்நிலையில், சீதாலட்சுமிக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜகண்ணன் மனைவி ரேவதிக்கும் (35)  தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. அப்போது ரேவதியும், அவரது மாமியார் வள்ளியும் சீதாலட்சுமியை சரமாரியாக தாக்கியுள்ளனர். 2 பேரும் தாக்கியதில் சீதாலட்சுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே, அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீதாலட்சுமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருப்பத்தூர் டவுன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, ரேவதி, வள்ளி ஆகியோரை கைது செய்தனர்.