செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 31 ஜூலை 2024 (13:40 IST)

ஆளுநருக்கு பதவி நீட்டிக்கப்படுமா.? நான் ஜனாதிபதியோ, பிரதமரோ இல்லை.! சூடான முதல்வர் ஸ்டாலின்.!!

Stalin
தமிழக ஆளுநர் ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு நான் ஜனாதிபதியோ, பிரதமரோ இல்லை என முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
 
சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின்,  வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பேசியதாக தெரிவித்தார். கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று பினராயி விஜயனிடம் நான் உறுதியளித்துள்ளேன் என்று அவர் கூறினார்.
 
கேரளாவுக்கு இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் மருத்துவக் குழுவும், நிவாரண நிதியாக ரூ.5 கோடி வழங்கப்பட்டது என்றும் இன்னும் தேவை என்றால் உதவி வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார். ராகுல் காந்தி மீதான சாதி ரீதியிலான தாக்குதல் குறித்து தற்போது கருத்து கூற முடியாது என்று அவர் கூறினார்.

 
தமிழக ஆளுநர் ரவியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், பதவி நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு, ''நான் ஜனாதிபதியோ, பிரதமரோ இல்லை'' என முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.