ரயில் நிலையங்களில் 'wi-fi ' வசதி ஏற்படுத்த முடிவு !
தெற்கு மண்டலத்தில் உள்ள 543 முக்கிய ரயில் நிலையங்களில் இலவச வை-ஃபை வசதியை ஏற்படுத்த தெற்கு ரயில்வேதுறை முடிவெடுத்துள்ளது.
அதில், சென்னையில் -135 இடங்களிலும், திருச்சியில் -105 இடங்களில், சேலத்தில்-79 இடங்களில், மதுரையில் -95 இடங்களில், பாலக்காட்டில் -59 இடங்களில், திருவனந்தரபுரத்தில் -70 இடங்களிலும் வை-ஃபை வசதி ஏற்பாடு செய்ய ரயில்வேதுறை முடிவெடுத்துள்ளது.
இந்தத் திட்டம் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.