வெள்ளி, 13 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2024 (14:15 IST)

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி ஏன் வழங்க வேண்டும்:விஜய பிரபாகரன் பேச்சு.‌...

தேனி மாவட்ட தேமுதிக சார்பிலும் பெரியகுளம் ஒன்றிய, நகர தே.மு.தி.க சார்பிலும் நேற்று தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் விழா, 20 ஆம் ஆண்டு கட்சி துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என  முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
 
பெரியகுளம் வடகரையில் அமைந்துள்ள அரண்மனைத் தெருவில் நடைபெற்ற கூட்டத்தில் விஜய பிரபாகரன் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். 
 
அப்போது பேசிய விஜய பிரபாகரன்.....
 
செழிப்பான தேனி மாவட்டத்தில் தற்போது எங்கு பார்த்தாலும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது, கழிவுநீர் சாலைகளில் ஓடுகிறது. 
 
அதனை சரிசெய்ய இங்குள்ள மக்கள் பிரதிநிதிகளான சேர்மன், எம்எல்ஏ போன்றோர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதோடு மாம்பழம் அதிகம் விளையக்கூடிய பெரியகுளம் பகுதியில் மாம்பழக் கூழ் பதனிடும் தொழிற்சாலை அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.‌ வாரம் மூன்று நாட்கள் மட்டுமே சென்னைக்கு உள்ள ரயில் சேவையை நாள்தோறும் இயங்கும் வகையில் திண்டுக்கல் - குமுளி அகல ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த ஆட்சியாளர்கள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. ‌‌
 
மத்திய பாஜக அரசு மைனாரிட்டி அரசு, அது நீண்ட நாள் நீடிக்காது என மீடியா முன் பேசும் முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமரிடம் நேரடியாக ஏன் அதை சொல்லவில்லை.‌ அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்ததும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி ஏன் வழங்க வேண்டும். அவர் என்ன மக்களுக்காக போராடி சிறை சென்றாரா? எதற்காக செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
 
மது ஒழிப்பு மாநாடு நடத்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழ்நாட்டில் உடனடியாக மது ஒழிப்பை அமல்படுத்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஏன் வலியுறுத்தவில்லை.‌ 
 
இன்றைக்கு உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரனதற்கு காரணம் அவரது தாத்தா கருணாநிதி 6 முறை முதலமைச்சராக இருந்தவர், அவரது தந்தை ஏற்கனவே துணை முதலமைச்சர் தற்போது முதலமைச்சராக இருக்கிறார். அந்த அடிப்படையில் அவர் தற்போது துணை முதலமைச்சராக வந்துள்ளார். 
 
மற்றபடி ஏதும் இல்லை. உண்மையிலேயே மக்கள் சிந்திக்க வேண்டும். எந்த இளைஞர்கள் வர வேண்டும் என்று பேசினார்.