செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 11 அக்டோபர் 2016 (15:42 IST)

ஜெயலலிதாவை பார்க்க ஏன் மோடி வரவில்லை - போட்டு உடைக்கும் பொன்.ராதாகிருஷணன்

பிரதமர் மோடி தமிழக முதல்வரை பார்க்க தற்போது  சென்னை வர இயலாது. காரணம், அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட பணிகள் உள்ளன என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடத்தில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ”தமிழக பாஜக சார்பாக அகில இந்திய தலைவர் அமித்ஷாவை சந்தித்து காவிரி பிரச்சனை குறித்து வலியுறுத்தப்பட்டது. விவசாயிகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்ததார்.
 
பிரதமர் மோடி தமிழக முதல்வரை பார்க்க தற்போது சென்னை வர இயலாது. காரணம், அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட பணிகள் உள்ளன” என தெரிவித்தார்.
 
எய்ம்ஸ் மருத்துவர்கள் உளவு பார்த்ததாக குறித்த கருத்திற்கு பதிலளித்த அவர், “தமிழக முதலமைச்சர் உடல்நலமில்லாமல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உயரிய சிகிச்சை அளிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் வந்துள்ளார்கள். அவர்களை மத்திய அரசாங்கத்துக்கு உளவு பார்க்க வந்ததாக கூறி இருப்பது அசிங்கமான கற்பனை. வெட்க கேடானது” என்று தெரிவித்துள்ளார்.