வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (17:36 IST)

மதுரை எய்ம்ஸ் தாமதத்திற்கு ஜப்பான் தான் காரணம்: மத்திய அமைச்சர்!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிலையில் அது குறித்த பணிகள் எதுவும் தொடங்கவில்லை 
 
இது குறித்து கேள்விகள் அவ்வப்போது எழுப்பப்பட்டு வந்த நிலையில் தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் தாமதம் ஆவதற்கு ஜப்பான் நிறுவனமே காரணம் என மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் பதிலளித்துள்ளார் 
 
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூபாய் ஆயிரத்து 264 கோடி ஒதுக்கி அதில் ரூபாய் 12 கோடி செலவிடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தாமதம் ஏன் என்ற திமுக எம்பி டி ஆர் பாலு அவர்களின் கேள்விக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் இவ்வாறு பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் கடந்த ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு குஜராத்தில் அடிக்கல் நாட்டிய நிலையில் தற்போது அங்கு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது