1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 17 ஜூலை 2023 (10:26 IST)

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை ஏன்? பரபரப்பு தகவல்..!

Ponmudi
அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் இந்த சோதனை எதற்காக என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 
 
கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி விதிகளை மீறி செம்மண் எடுத்து அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது
 
அதிமுக ஆட்சியில் 2012 ஆம் ஆண்டு பதிவு செய்த இந்த வழக்கின் அடிப்படையில் தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே அதிமுக ஆட்சியின் போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் 11 ஆண்டுகளுக்கு முன் பொன்முடி மீது பதியப்பட்ட வழக்கில் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran