திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 13 ஜூலை 2016 (12:24 IST)

என் மகளை ஏன் கொன்றாய்?: ராம்குமாரிடம் கதறி அழுத சுவாதியின் தந்தை!

இளம்பெண் சுவாதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டார். பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நேற்று புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு நடந்தது. இதில் குற்றவாளியை அடையாளம் காட்ட சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் மற்றும் ரயில் நிலையத்தில் கடை வைத்திருக்கும் சிவசங்கர் ஆகியோர் வரவழைக்கப்பட்டனர்.


 

 
 
இந்த அடையாள அணிவகுப்பின் போது முதல் ரவுண்டில் ராம்குமாரை அடையாளம் காட்ட தடுமாறிய சுவாதியின் தந்தை இறுதியில் சரியாக அடையாளம் காட்டினார். இரண்டாவது ரவுண்டில் வேறு உடை மாற்றப்பட்டு அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த ரவுண்டில் எளிதாக ராம்குமாரை அடையாளம் காட்டினார் சுவாதியின் தந்தை.
 
மூன்றாவது ரவுண்டில் அடையாளம் காட்டும் போது தனது உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் சுவாதியின் தந்தை, என் மகளை ஏன் கொலை செய்தாய் என ராம்குமாரை பார்த்த திரும்ப திரும்பக் கேட்டு கதறி அழுதுள்ளார்.
 
உன்னால்தானே எனது மகள் கொல்லப்பட்டாள் இப்போது நானும் உன்னால்தான் சிறைக்குள்ளேயே வந்துள்ளேன் என சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை தேற்றி அழைத்து சென்றுள்ளனர்.